மஹாசிவராத்திரி அன்று வெளியான 'சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா'வின் 'அலை' இசைத்தொகுப்பு, ஈஷா மக்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விரும்பிக் கேட்டு வாங்கும் அளவிற்கு 'ஹிட்' ஆகியுள்ளது. இசை ரசிகர்களுக்கு, மேலும் ஒரு விருந்தாக, 'அலை' இசைத் தொகுப்பிலிருந்து வாரம் ஒரு பாடலை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூடவே பாடலின் வரியும் வர்ணனையும் உங்களுக்காக...


ஒரு அந்நியர் வந்தார்...

'ஒரு அந்நியர்... ' என உச்ச ஸ்தாயியில் துவங்கும்போதே ஏதோ ஒரு புது உற்சாகம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. நாட்டுப்புற வகையில் சேரும் இந்தப் பாடலில், நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் ஒன்றுசேர, புல்லாங்குழலும் இடை இடையில் எட்டிப்பார்க்கிறது.

பொதுவாக நாடுப்புற பாடல்களில், ஆன்மீகத்தைப் பாடும்போது, மாரியம்மனோ காளியம்மனோ பாடுபொருளாக இருப்பார்கள். முதல்முறையாக ஒரு குருவின் வருகையை அழகாக வர்ணிக்கிறது இந்தப் பாடல்.

பாடலை டவுன்லோடு செய்ய குறிப்பிட்ட கட்டணம் எதுவும் இல்லை. உங்கள் விருப்பத்தின்பேரில் உங்களால் முடிந்த ஏதோ ஒரு தொகையை இதற்கான நன்கொடையாக இங்கே செலுத்தமுடியும்.

பாடலை இங்கே டவுன்லோடு செய்யலாம். பாடலின் வரிகளும் உங்களுக்காக...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.


 

ஒரு அந்நியர் வந்தார் ஒரு காலை
சத்தம் இன்றி வைத்தார் கால் அடியை
ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்
கைகளில் மறைத்து கொண்டு சென்றார்

பறவையின் பாட்டு; மழையின் மெட்டு
தென்றலின் கீதம்; அலைகளின் நாதம் (x2)
ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்

மேகத்தின் உருளல் ; கைகளின் தட்டல்
குழந்தையின் மழலை ; மக்களின் ரகளை (x2)
ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்
ஒரு அந்நியர் ...

மலையின் எதிரொலி ; பிள்ளையின் சிரிப்பொலி
அர்ச்சகர் ஸ்தோத்ரம் ; பக்தரின் மந்திரம்
ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்
ஒரு அந்நியர் ...

காற்றின் சீழ்க்கை ; மூங்கிலின் கூட்டிசை
அன்னையின் தாலாட்டு ; தந்தையின் பாராட்டு

ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்

ஒரு அந்நியர் வந்தார் ஒரு காலை
யார் என்று எமக்குத் தெரியவில்லை
ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்
மௌனத்தையே விட்டுச் சென்றார்
மௌனத்தை உணர்ந்து பார்த்த உடன்
அதில் அத்தனை ஒலியும் இருந்தன.
ஒரு அந்நியர் வந்தார் ஒரு காலை
பரிசளித்தார்  மௌனத்தை

ஒரு அந்நியர் வந்தார் ஒரு காலை
சத்தம் இன்றி வைத்தார் கால் அடியை
ஒவ்வொரு ஒலியாய் பறித்து எடுத்தார்
மௌனத்தையே பரிசளித்தார் (x3)


 



Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/