ஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்!

ainthu-pen-petral-arasanum-aandiyavan

“ஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்!” என்ற ஒரு பேச்சு வழக்கத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் ஏதும் உண்மை இருக்குமா? பெண் பிள்ளை பெற்றவர்கள் பாவமா? சத்குரு இதற்கு என்ன சொல்கிறார்?! வாருங்கள் கேட்போம்!

சத்குரு:

இது மிகக் கொடூரமான நம்பிக்கை.

சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.

உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.
திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.

பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.

குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.

இன்றைய உலகில் அப்படி அந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.

மாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.

உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert