பள்ளிக்கூட பாட புத்தகத்தில் படித்த பழமொழிகளில், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது. இதற்கு சத்குரு தரும் விளக்கமென்ன? தொடர்ந்து வாசியுங்கள்...

சத்குரு:

மிகத் தவறான நம்பிக்கை.

வயது ஏற ஏற, பாறைகள்போல் இறுகிப் போகிற மனிதர்களுக்கு வேண்டுமானால், இது உண்மையாக இருக்கலாம். ஒரு மலர்போல் வாழ்க்கையில் உயிர்ப்புடன் இருப்பவருக்கு இது பொருந்தாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஐந்து வயதிலாவது அனுபவமின்மை காரணமாக ஏதாவது தவறாக செய்துவிடக்கூடும். ஐம்பதில் எதற்கு இந்த அச்சம்?

உங்கள் கருத்துகள், தீர்மானங்கள், உணர்வுகள் இவற்றை உறையவிட்டு விடுவதால், உங்களுக்கான வாய்ப்புகளுக்கு நீங்களே தான் போட்டுக் கொள்கிறீர்கள்.

மொழி, இனம், உடல், சமூகநிலை என்று ஏதோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தோடு உங்களை அடையாளப்படுத்தி, இறுகிவிடாமல் உங்களை திரவ நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். அர்த்தமற்ற சிந்தனைகளால் உங்களை நிரப்பி விடாமல், புதியனவற்றுக்கு இடம் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் வயது என்ன செய்ய முடியும்?

ஐந்து வயதிலாவது அனுபவமின்மை காரணமாக ஏதாவது தவறாக செய்துவிடக்கூடும். ஐம்பதில் எதற்கு இந்த அச்சம்?

வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை கவனித்து வாழத் தொடங்கினால், ஐந்தைவிட ஐம்பது வயதில் அல்லவா சிறந்த வாய்ப்பு இருக்கிறது?

ஐந்து வயதில் நான் ஆனந்தமாக இருந்தேன். இன்று, வாழ்க்கையின் ஆழங்களை உணர்ந்தபின், அதைவிடப் பல மடங்கு கூடுதலாகவே ஆனந்தமாயிருக்கிறேன்.

நாற்பத்தைந்து வருட அனுபவம் கூடுதலாக இருப்பதை உங்களுக்கு சாதகமாக அல்லவா மாற்றிக் கொள்ள வேண்டும்?

வயது ஒருபோதும் குறைபாடு அல்ல; அது அனுபவம்.

வயது என்றும் தடையல்ல. அது கூடுதல் சக்தி.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!