சத்குரு:

சிவன் ஒரு யோகி - வாழ்வியல் உண்மை அவன். தத்துவ ஞானத்தை சாராதவன். அறிவாற்றலால் பகுத்துப் பார்த்து உணர இயலாதவன். இவனை புரிந்துகொள்வது சாத்தியமில்லை. அவனை ஏற்றுக்கொள்வது மட்டுமே சாத்தியம். சிவன் எனும் அந்தப் பரிமாணத்துடன் உங்களால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தால், அதனை பரிசோதிக்க இயன்றால், அது அற்புதமான விஷயங்களை உங்களுக்கு நிகழ்த்திக் காட்டும். பார்வதி தேவிக்கு அவன் வழங்கியது போலவே நீங்களும் பேரானந்தத்தில் இலயித்திருக்க முடியும். இந்தவொரு பரிமாணத்தை புரிந்துகொள்ளவோ, உங்கள் வலிமையினால் வெல்லவோ முடியாது.

"உடல் முழுதும் சாம்பல் பூசி திரிபவனை, மண்டையோட்டில் உணவு உண்பவனை என் மகள் மணப்பது எப்படி? கழுத்தில் கபால மாலை அணிகிறான், அவனது நண்பர்கள் யாவரும் பூதகணங்கள், உருக்குலைந்த உயிர்கள். எப்படி என் மகளை அவனுக்கு மணமுடிப்பது," என்று அவருக்குள் போராட்டம்.

தன் முன்னால் வருவதை வெல்ல நினைப்பதே உங்கள் மனதின் இயல்பு. இதுபோன்ற அறிவுடன் செயல்படும்போது, வாழ்வின் சூட்சும அம்சங்கள் உங்களை விட்டு முற்றிலுமாய் நீங்கிவிடும். குறிப்பிடத்தக்க பரிமாணங்கள் உங்கள் வாழ்வில் நுழையவே நுழையாது. பணம் சம்பாதிக்கலாம், வளமை அடையலாம், கைகளில் அதிகாரம் இருக்கலாம், ஆனால் அன்பின் சுவையை உங்களால் உணர முடியாது. தியானத்தை உங்களால் உணர முடியாது. கருணையை உங்களால் உணர முடியாது. அனைத்திற்கும் மேலாய், பேரானந்தத்தை உங்களால் உணரவே முடியாது. சிவன் என்னும் அந்தப் பரிமாணம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. அதனால் அதனுடன் போராடாதீர்கள்.

சிவன், பார்வதி தேவிக்கு ஞானோதயத்தை மட்டும் வழங்கவில்லை, ஒருவர் தன் வாழ்வில் எவற்றையெல்லாம் உணரமுடியுமோ அவை அனைத்தையும் உணரச் செய்தார். பல பாதைகள் மூலமாக ஒரு மனிதர் ஞானோதயத்தை நோக்கி செல்ல முடியும். ஆனால், பார்வதிக்கு அனைத்து தடங்களையும் சிவன் காட்டினார். மென்மையாக, எளிமையான வழிகளின் மூலம், மிக மிக எளிமையாக அவருக்கு வழங்கினார். சிந்திக்கும் மனங்களால் இவற்றை புரிந்துகொள்ள இயலாது.

தன்னை நாடி வருபவர்களிடம் எதிர்ப்பு தோன்றும் போதெல்லாம் சிவன் அதனை முற்றிலும் வித்தியாசமான விதத்தில் கையாண்டார். சில கணங்களில் சீற்றமுற்று, அழித்திடும் தாண்டவம் புரிந்தார். சில சமயங்களில், தன் நெற்றிக்கண்ணை திறந்து தன் முன்னே இருந்தவர்களை எரித்தார். வேறு சில சமயங்களில், எதிர்ப்புகளை மிகச் சூட்சுமமாய் துடைத்தார்.

சிவனை மணந்துகொள்ள துடித்த பார்வதி, தன் சிறுவயதிலிருந்தே பல கடுமையான தவங்களுக்கு உள்ளானார். சிவன் அகோரமான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததால், பலருக்கும் பார்வதி சிவனை மணம் புரிவதில் விருப்பம் இல்லை. அதனால், அவரை திருமணம் செய்ய உற்சாகப்படுத்தவும் இல்லை. பார்வதியின் பெற்றோருக்கும்கூட அவர் சிவனை மணப்பதில் விருப்பமில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பார்வதியின் அம்மா மீனா இந்தத் திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். "உடல் முழுதும் சாம்பல் பூசி திரிபவனை, மண்டையோட்டில் உணவு உண்பவனை என் மகள் மணப்பது எப்படி? கழுத்தில் கபால மாலை அணிகிறான், அவனது நண்பர்கள் யாவரும் பூதகணங்கள், உருக்குலைந்த உயிர்கள். எப்படி என் மகளை அவனுக்கு மணமுடிப்பது," என்று அவருக்குள் போராட்டம்.

திருமண நாளும் வந்தது. சிவனைப் பற்றி பல கதைகள் கேட்டிருந்த மீனா, அவரை நேரில் பார்த்ததில்லை. வீட்டு முகப்பில் அமர்ந்து, மாப்பிள்ளையை பார்க்க காத்திருந்தவர், பல கடவுளர்களையும் தெய்வீக உயிர்கள் உள்ளே வருவதையும் பார்த்தார். அனைவரும் திருமணத்திற்கு வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை ஒரு ஆணழகனைப் பார்க்கும்போதும், இவர்தான் சிவன் என்று அவர் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு கிடைத்த பதிலோ, "இல்லை, இல்லை, இல்லை" என்பதே.

கடைசியில் சிவன் வந்தார். அவர் உள்ளே நுழையும்முன் பல அலறல் சத்தங்கள் எழுந்தன. அவரைச் சுற்றி பல உயிர்கள் ஊர்ந்தும் நெளிந்தும் வந்துகொண்டிருந்தன. அவரோ, உடல் முழுதும் சாம்பல் பூசி, புலித்தோல் உடுத்தி, போதை தலைக்கேறும் வரை குடித்திருந்தார். மதிமயங்கிய நிலையில் உள்நுழைந்தார். "மஹாதேவன் வந்துவிட்டார்" என்று முழங்கினர்.

"இவனா என் மகளின் கணவன்" என்று மீனா மயங்கிப் போனார். மயக்கத்திலிருந்து தெளிந்த மீனா, "என் மகளை காப்பாற்றுங்கள், அவள், அவனை திருமணம் செய்வதிலிருந்து காப்பாற்றுங்கள். இவனைப் போன்றவனுக்கு என் மகளைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை," என்று கதறினார். சிவனின் கால்களை ஆரத்தழுவினார். கெஞ்சினார். மன்றாடினார். சிவன் சுந்தரமூர்த்தியாய் வடிவம் பெற்றார். உலகம் அதுவரை கண்டிராத பேரழகனாய் உருவம் பெற்று நின்றார்.

மீனாவின் எதிர்ப்பை சிவன் கையாண்டது இப்படித்தான். மீனா, தான் ஒரு அரசி என்று நினைத்துக் கொண்டிருந்தார், சிவனை இளக்காரமாய் பார்த்தார். அதனால், தன்னைப் பற்றியும் அவளைப் பற்றியும் மீனா கொண்டிருந்த மாய பிம்பங்களை சிவன் உடைத்துப் போட்டார்.

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR

ஓவியர் பிரியேந்த்ர சுக்லா அவர்களுக்கு நன்றிகள்

Test CMS Updates