சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 15

"நான் ஆரோக்கியமாகத் தானே இருக்குறேன்; அப்புறம் எப்படி சாவேன்?!" இது பலருக்கும் எழும் கேள்வி. இந்தக் கேள்வி சேகர் கபூருக்கும் எழ, விடை கிடைத்தது சத்குருவிடமிருந்து. மரணம் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் சத்குரு பேசிய வார்த்தைகள் இந்த வாரப் பகுதியில்!


சேகர்: சத்குரு, ஆரோக்கியம் என்பதைப் பற்றி பலரும் பலவிதமாகக் குழப்புகிறார்கள்.  ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் இந்த இரண்டைப் பற்றியும் எல்லோரும் பேசுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் நாம் ஆரோக்கியமாக இருக்க இயற்கையே நமக்கு உதவுமா? அல்லது மருத்துவ உதவியைத்தான் நாடவேண்டுமா?
இயற்கை விரும்புவதால்தான் நீங்கள் இப்போது உயிரோடு இருக்கிறீர்கள். இப்போது, நீங்கள் உயிரோடிருப்பதற்கு இந்த மருந்துகளோ அல்லது மருத்துவர்களோ காரணமில்லை. இந்த உயிருக்கு தானாகவே வாழ்ந்து கொள்ளும் திறமை இருக்கிறது.

சத்குரு: (சிரிக்கிறார்) நீங்கள் எப்போதும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயற்கைக்கு  இல்லை. நீங்கள் சாக வேண்டும் என்பதுதான் இயற்கையின் விருப்பம். இப்போது நீங்கள் உயிருடன் இருப்பது கூட இயற்கையின் விருப்பம்தான்.

இயற்கை விரும்புவதால்தான் நீங்கள் இப்போது உயிரோடு இருக்கிறீர்கள். இப்போது, நீங்கள் உயிரோடிருப்பதற்கு இந்த மருந்துகளோ அல்லது மருத்துவர்களோ காரணமில்லை. இந்த உயிருக்கு தானாகவே வாழ்ந்து கொள்ளும் திறமை இருக்கிறது, அப்படித்தான் அது வாழ்ந்து வருகிறது. மருந்துகளின் உதவி சிறிது இருக்கலாம். ஆனால் மருந்துகளால் உயிரை நிலைநிறுத்த முடியாது.

இந்த உடல் உள்ளே இருந்துதான் உருவாகியிருக்கிறது. உணவு வெளியே இருந்து கொடுத்திருக்கலாம். ஆனால், படைத்தல் செயல் உள்ளேதான் நிகழ்ந்தது. எனவே படைத்தவன் அல்லது இந்த உடலை உருவாக்கிய சக்தி உள்ளுக்குள்தான் இருக்கிறது. எனவே இந்த உடலை பழுது பார்க்கத் தேவையிருந்தால், உள்ளூரில் இருக்கும் மெக்கானிக்கிடம் (மருத்துவர்) செல்வதை விட, உடலை உருவாக்கியவரிடம் செல்வதே சிறந்தது. இல்லையா? உருவாக்கியவரோடு உங்களுக்குத் தொடர்பு இருந்தது என்றால், அவரைத்தான் அணுகுவீர்கள். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளருக்கு, மெக்கானிக்கை விட, இந்த இயந்திரத்தைப்பற்றி நன்றாகத் தெரியும்.

ஆனால், உருவாக்கியவனுடன் உங்களுக்குத் தொடர்பு இல்லையென்றால், நீங்கள் பழுது பார்ப்பவரிடம்தான் செல்ல வேண்டியிருக்கும். எனவே, உள்நிலை மூலத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தால், இயற்கையாகவே ஆரோக்கியத்துடன்தான் இருப்பீர்கள். உடலின் ஆரோக்கியத்தை வெளியேயிருந்து நீங்கள் பராமரிக்கத் தேவையில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சேகர்: உள்தன்மையுடன் தொடர்பு கொண்டிருக்கும்போது, ஆரோக்கியத்திற்காக நாம் ஒன்றும் திட்டமிட வேண்டியதில்லையா?

சத்குரு: உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுமே ஆரோக்கியத்துடன் இருக்கும்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது விஞ்ஞான உண்மை. ஆனாலும் உங்களுக்கு ஏன் நோய் வருகிறது வெளிப்புறத்திலிருந்து உங்கள் உடலில் புகுந்த நோய்க்கிருமிகள் காரணமாக இருக்கலாம். அப்போது அக்கிருமிகளை அழிக்க இரசாயனங்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அது ஒரு போர் சூழ்நிலை போல. அந்த நிலைமையிலிருந்து தப்பிக்க எது வேண்டுமானாலும் அப்போது செய்யலாம். அது வேறு விஷயம்.

ஆனால் 70 சதவீதத்திற்கும் மேலான நோய்கள் நாட்பட்ட நோய்கள். அந்த நோய்களெல்லாம் அவர்களாகவே உருவாக்கிக் கொள்வது. எனவே, நீங்கள், இந்த உடலை உருவாக்கிய படைத்தவனுடனேயே தொடர்பில் இருக்கும் பட்சத்தில், ஆரோக்கியம் என்பது ஒரு விஷயமே அல்ல. மேற்கத்திய சமூகங்களில் அவர்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதைப் பார்த்தால், அதுவே அவர்களுக்கு முழு நேர வேலையாக உள்ளது. அங்கே எப்போதும் அதைப்பற்றிய பேச்சுதான்.

சேகர்: ஆம், 25, 26 வயதுடையவர்கள் கூட...

சத்குரு: ஆம். (சிரிக்கிறார்). ஆரோக்கியம் என்பது விவாதிப்பதற்கோ அல்லது விரும்புவதற்கோ கூட உட்பட்டதல்ல. நமது உடல், மன கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட விதமாக வைத்திருந்தால், ஆரோக்கியம், இயற்கையாகவே ஊற்றெடுக்கும்.

சேகர்: தியானத்தின் வழியாக வைத்திருந்தால்... என்று சொல்ல வருகிறீர்களா?

தியானம் என்ற வார்த்தையை நான் தவிர்க்கிறேன். ஏனென்றால் அது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. நான் தியானம் என்று கூறினால், பிறகு அதைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தது போல கற்பனை செய்கின்றனர்.

சத்குரு: அப்படி சொல்வதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் தியானம் என்ற வார்த்தையை நான் தவிர்க்கிறேன். ஏனென்றால் அது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. நான் தியானம் என்று கூறினால், பிறகு அதைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தது போல கற்பனை செய்கின்றனர். ஒரு நாளில் இரண்டு நிமிடத்திற்கு முற்றிலும் அசையாமல் உட்கார முடிந்தால் கூட, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இரண்டே இரண்டு நிமிடம். அசைவில்லாமல் இருப்பது எப்படி என்று தெரியாததால்தான் மனிதனுக்கு நோய் வருகிறது.

சேகர்: சரி, நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு எனக்கு மரணம் எப்படி வரும்?

சத்குரு: ஆரோக்கியத்திற்கும் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆரோக்கியமாக வாழ்வது போல ஆரோக்கியமாகவே இறக்கவும் வேண்டும், ஆரோக்கியம் இழந்து அதன்பிறகே இறப்பு நேரிட வேண்டும் என்பதில்லை. உங்கள் உயிர்த்தன்மை இப்போது அதிர்வுடன் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் உங்களுக்குள் ஒரு சாப்ட்வேர் (software) இருப்பதால்தான். அந்த சாப்ட்வேரைத்தான் நாம் பாரம்பரியமாக 'ப்ராரப்தம்' என்கிறோம்.

அந்த சாப்ட்வேரில் உங்கள் உயிர்த்தன்மை பற்றிய  தகவல்கள் சில பதிவுகளாக இருக்கும். அந்தத் தகவல்களை வைத்து சாப்ட்வேர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சாப்ட்வேரில் உள்ள பதிவுகள் தீர்ந்து போகும்போது உயிர்சக்தியின் தீவிரம் நலிவடைய ஆரம்பிக்கும். அதைத்தான் நாம் முதுமை என்கிறோம். ஆனால், பெரும்பான்மையோர் முதுமை வந்து இறப்பதில்லை. உயிர்சக்தியின் தீவிரம் குறைந்து இறப்பதைவிட உடல் சேதமடைந்து இறப்பவர்கள்தான் அதிகம். உடல் சேதம் உடல் நலக்குறைவினால் இருக்கலாம் அல்லது விபத்தினால் இருக்கலாம் அல்லது மாரடைப்பினால் இருக்கலாம். உயிர் இந்த உடலில் தங்கியிருக்க முடியாதபடி உடல் சேதமாகிவிட்டது. எனவே உயிர் பிரிகிறது.

அல்லது சக்திநிலை காரணமாகவும் உடலிலிருந்து உயிர் பிரிகிறது. அதாவது சக்திநிலையின் தீவிரம் ஒரு அளவிற்கு மேல் போகும்போது, உயிர்சக்தி ஒரு உடலில் சிக்கியிருக்க மறுக்கிறது. அதே போல் ஒரு அளவிற்குக் கீழே போகும்போதும், உடலுக்குள் இருக்கும் திறனை, உயிர்சக்தி இழந்துவிடுகிறது. அதாவது சக்திநிலையின் தீவிரம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருக்கும்போது மட்டுமே உடலுக்குள் உயிர் இருக்கும்.

அடுத்த வாரம்...

"இறந்த பின் உயிர் சக்திக்கு என்ன ஆகிறது?" என்ற சேகர் கபூரின் கேள்விக்கு சத்குரு சொல்லும் பதில் என்ன?! அடுத்த வாரப் பதிவில் பார்ப்போம்!