"நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்; கெட்டவர்கள் நன்றாக வாழ்வதுபோல் தோன்றுகிறதே?! இது எதனால்?" பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை இந்த வீடியோவில் காணலாம். ஆனந்தமாக இருப்பதற்கு நல்லவராக இருக்க வேண்டுமா? அல்லது கெட்டவராக இருக்க வேண்டுமா? தெரிந்துகொள்ள வீடியோவைச் சொடுக்குங்கள்!


குறிப்பு: இந்த வீடியோ, குலதெய்வ வழிபாடு அவசியமா? என்ற DVD யிலிருந்து தொகுக்கப்பட்டது.

இந்த டிவிடி'யில் பிரபல பேச்சாளரும் கல்விப் பணியாற்றுபவருமான கலைமாமணி முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் அளித்த தீர்க்கமான பதில்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த டிவிடி'யிலிருந்து சில கேள்விகள்:

  • குழந்தைகள் மென்மையாக வாழ கற்றுக்கொடுப்பது எப்படி?
  • ‘அழுதால் உனைப் பெறலாமே’ என்று இறைவனைக் குறித்துச் சொல்கின்றனர். ஆனந்தமாக இருந்தால் இறைவனைப் பார்க்கமுடியாதா?
  • மூத்தோர்களுக்குக் கடன் செய்வதால் ஏதாவது பலன் உண்டா?
  • குலங்கள் எப்படி உருவாகின? குல தெய்வ வழிபாடு அவசியமா?