ஆதியோகி பிரதிஷ்டை – அரிதிலும் அரிதான வாய்ப்பு!

ஆதியோகி பிரதிஷ்டை - அரிதிலும் அரிதான வாய்ப்பு!, Adiyogi prathishtai - arithilum arithana vaippu

சத்குரு:

இந்த மஹாசிவராத்திரி தினத்தன்று ஆதியோகி சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம். அதற்கான பணிகள் அனைத்தையும் முடிப்பதற்கு மையத்தில் இருப்பவர்கள் இரவு பகலாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆதியோகி பிரதிஷ்டை - அரிதிலும் அரிதான வாய்ப்பு!, Adiyogi prathishtai - arithilum arithana vaippu

உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இது வாழ்நாளில் ஒருமுறையே காணக் கூடிய பிரம்மாண்ட நிகழ்வாக இருக்கப் போகிறது. தியானலிங்கப் பிரதிஷ்டையை தவற விட்டவர்களுக்கு, இது நல்லதொரு வாய்ப்பு.

உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்த பிறகே செல்லக்கூடிய, கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக, அடுத்த தலைமுறையினர் இருக்கக்கூடாது.

உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும். இன்று பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல் தேய்ப்பது தெரிந்திருப்பதுபோல, தங்களை எப்படி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும் மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது நிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும், சாத்தியமாகவும் மாறுவார்கள்.

குறிப்பு:

நாள்: பிப்ரவரி 24 -மஹாசிவராத்திரி அன்று
இடம்: ஈஷா யோக மையம், கோவை.

ஆதியோகி பிரதிஷ்டை பற்றி மேலும் விபரங்களுக்கு 83000 83111 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply