கேதார்நாத் இத்தனை பாதிப்புக்கு உள்ளாகிய பிறகு சத்குரு இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தோடு காத்திருந்தவர்களுக்கு இந்த வார சத்குரு ஸ்பாட் விடையாய் வருகிறது. உத்தரகண்ட் சேதம் இயற்கை சேதமல்ல, மனித சேதம் என்று பேசும் அவர், சேதத்தை பற்றி மட்டும் பேசாமல் ஒரு சமூகத் தலைவருக்கே உள்ள தனித்துவத்தோடு முழு பிரச்சனையையும் சிறப்பாக அலசுகிறார்…

ரு மனிதன், குறிப்பிட்ட வரையறைக்குள் சிக்குண்டு அதற்குள்ளேயே முடங்கிப் போய்விடக் கூடாது என்னும் சாத்தியத்தை ஆதியோகி வழங்கினார். இந்த உடலுக்குள் பொருந்திப் போகும் அதே சமயம் அதனுடன் கட்டுண்டு போய்விடாமல் இருக்கவும் முடியும். இந்த உடலுக்குள் வசிக்கும் போதே இந்த உடலாக மாறிவிடாமலும் இருக்க வழி உள்ளது. உங்கள் மனம் உங்கள் மேல் தாக்கம் ஏற்படுத்தாமல் அதனை பயன்படுத்த, பல உபாயங்களும் உள்ளன.

தற்சமயம் நீங்கள் எந்தவொரு பரிமாணத்தில் இருந்தாலும் உங்களால் அதனைக் கடந்து வாழ முடியும். அதற்கு மற்றொரு வழி உள்ளது. "உங்களை தேவையான செயல்முறைக்கு உட்படுத்திக் கொண்டால், உங்களுடைய தற்கால எல்லைகளை கடந்து உங்களால் வாழ முடியும்," என்று ஆதியோகி சொன்னார். அதைச் செய்வதற்கு வழிமுறைகளையும் உருவாக்கிக் கொடுத்தார் என்பதே அவருடைய தனிச் சிறப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் செத்து விழும் முன்னர், ஆதியோகி இந்த உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை உலகம் அறியச் செய்ய வேண்டும். இதனை நிகழச் செய்ய நாம் பல நிலைகளில் பணிபுரிந்து வருகிறோம். அதில் ஒரு படியாக நாம் ஆதியோகி ஆலயங்களை எழுப்பி வருகிறோம். இந்த ஆலயங்களில், 21 அடி உயர, வெண்கல ஆதியோகி சிலையும் அவர் முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமும் இருக்கும். அது மிக சக்திவாய்ந்த இடமாக இருக்கும். முதல் முதலாக, டென்னிசியில் உள்ள நம் அமெரிக்க மையத்தில் இந்தக் கோவில் எழும்பும்.

அவர்தான், யோக அறிவியலை நமக்கு வழங்கினார் என்று இந்த உலகில் உள்ள எல்லோருக்கும் நிச்சயம் தெரிய வேண்டும். யோக இந்தியாவில் தோன்றவில்லை, யோகா என்பது ஐரோப்பிய உடற்பயிற்சி முறைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்க, கடந்த ஐந்தாறு வருடங்களில் ஐரோப்பாவில் 4 முக்கிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்னுமொரு 10, 15 புத்தகங்கள் வெளியானால், அதுவே உண்மையென நிலைத்துவிடும். உங்கள் புத்தகத்தில் எதை வரலாறு என்று படிக்கிறீர்களோ அதைத்தானே உண்மையென்று நீங்கள் நம்புவீர்கள். அவை உண்மையல்ல. அவையெல்லாம் தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பியவர்கள் எழுதிய புத்தகங்களே! இதைப் போன்றே, அடுத்த 10, 15 வருடங்களில் இன்னுமொரு 20, 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டால் யோகா அமெரிக்காவில் இருந்து தோன்றியது, கலிபோர்னியாவிலிருந்து உதித்தது அல்லது மடோனா யோகாவை கண்டுபிடித்தார் என்று அனைவரும் பேசத் துவங்கிவிடுவார்கள்.

இது சிரிக்கக்கூடிய விஷயமல்ல, இதை அவர்களால் எளிமையாக செய்துவிட முடியும். எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு தயாராய் ஒருசிலர் இருக்கிறார்கள். மிகப் பிரபலமான சில புத்தகங்கள் இவற்றை சொல்கின்றன. டான் பிரவுன் (Dan Brown) தன்னுடைய மிகப் பிரபலமான Angels and Demons என்னும் புத்தகத்தில் யோகம் ஒரு தொன்மையான புத்தமதக் கலை என்கிறார்.

கௌதமர் வெறும் 2,500 வருடங்களுக்கு முந்தையவர் மட்டுமே, ஆதியோகி 15,000 வருடங்களுக்கு முந்தையவர். இன்று கௌதமர் என்று சொல்கிறீர்கள், நாளை மடோனா என்று சொல்வீர்கள். நீங்கள் சில புத்தகங்கள் எழுதினால் அது உண்மையாகிவிடும். அதனால், நாம் மடிவதற்குள், யோகா ஆதியோகியிடமிருந்து தோன்றியது என்பதை இந்த உலகம் அறியச் செய்ய வேண்டும். வேறு யாரிடமிருந்தும் அல்ல அவரிமிருந்து மட்டுமே! இந்த உலகிலுள்ள அத்தனை பேருக்கும் அவரிடமிருந்து தான் யோகத்தை நாம் பெற்றோம் என்பது தெரிய வேண்டும்.

நாம் இதனை நிச்சயமாக செய்ய வேண்டும், ஏனெனில் இந்தியாவின் அடிப்படை பண்பே இங்குள்ளவர்கள் தேடுதலில் உள்ளவர்களாக இருப்பதுதான். நாம் எதையும் நம்புபவர்கள் அல்ல, நாம் விடுதலையை தேடுபவர்கள். அதுதான் நம்மை பிணைத்து வைத்துள்ளது. நூறு மைல் தூரம் பயணம் செய்தால், மக்கள் வித்தியாசமாக இருப்பார்கள், வெவ்வேறு மொழிகளை பேசுகிறார்கள், வேறு வேறு உணவு வகைகளை உண்கிறார்கள், அவர்களைப் பற்றிய ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதை நாம் கவனிக்க முடியும். அரசியல் அத்தியாயப்படி, ஒரு காலகட்டத்தில் நாம் 200 துண்டுகளாக சிதறிக் கிடந்தாலும், வேற்று நாட்டவர் நம்மை "ஹிந்துஸ்தான்," "பாரதம்" என்றே அழைத்தனர். அதற்கு விபரீதமான ஒரு காரணம், இது தேடுதல் உடையவர்களைக் கொண்ட பூமியாக இருந்தது. நம்பிக்கைவாதிகளைக் கொண்டதாக இருக்கவில்லை!

ராமர் என்ன சொன்னார், கிருஷ்ணர் என்ன சொன்னார், வேதங்கள் என்ன சொல்லிற்று, உபநிஷதங்கள் சொல்லியதென்ன, யார் என்ன சொன்னார் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே இங்கு இருந்ததில்லை. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உண்மையை தானாகவே தேடி அறிய வேண்டும். நீங்களே உங்கள் விடுதலையை நாட வேண்டும். இந்த தேசம் தேடுதல் உடையவர்களின் தேசமாக இருந்தது, அவர்கள் என்றுமே எதிரி நாட்டை கைவசப்படுத்த முனைபவர்களாக இருக்கவில்லை. இந்த மனித சமூகம் முழுவதையும் நம்பிக்கைவாதிகளாய் அல்லாமல் தேடுபவர்களாக மாற்றிவிட்டால், இவ்வுலகில் வெற்றி வேட்கை என்பது இருக்காது.

இன்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதைப்போல், நீங்களும் எனக்கு இந்த பிரபஞ்சத்தின் இயற்கை குணம் என்னவென்று தெரியாது என்பதைப் பார்த்தால், நீங்கள் யாருடன் சண்டையிடப் போகிறீர்கள்? இல்லை, என் கடவுள்தான் இந்த உலகை படைத்தார் என்றா சண்டையிடுவீர்கள்? இன்றைய பிரச்சனையே அதுதான். தனக்கு எதுவுமே தெரியாது என்பதை அறிந்தவர்தான் உண்மையில் தேடுபவர், சாதகர். மனித குலத்திற்கு இந்தவொரு விஷயம் மட்டும் நிகழ்ந்துவிட்டால், வன்முறைக்கான காரணங்கள் 90 சதம் குறைந்துவிடும்.

இதனை மீட்டெடுக்க, ஆதியோகியைத் தவிர மற்றொரு தூண்டுதல் இருக்க முடியாது/ஆதியோகியைப் போல் யாராலும் ஊக்கம் அளிக்க முடியாது. நமக்கும் அவரை பல வழிகளில் பிரகடனப்படுத்த வேண்டும்.

Love & Grace