ஆமை புகுந்த வீடு உருப்படாதா?

Aamai puguntha veedu uruppadaathaa?

“ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்ற பழமொழியினால், ஆமை என்றாலே துரதிர்ஷ்டவசமானது என்ற எண்ணம் நமக்கு வந்துவிட்டது. ஒரு சிறிய ஆமைக்கு மனிதனின் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவிற்கு சக்தி உள்ளதா? இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது…

சத்குரு:

அப்படியா? நானே இரண்டு மூன்று ஆமைகளைச் செல்லப் பிராணிகளாக வீட்டில் வைத்திருந்தேனே?

உண்மையில் ஆமை புத்திசாலி மிருகம் தெரியுமா? அதை விரும்பி கவனித்துக் கொள்பவரிடம் அது மற்ற செல்லப் பிராணிகளைப் போல்தான் நடந்து கொள்ளும்.

அதைக்கிட்டே சேர்க்கப் பிரியப்படாமல், ஆமையைக் கேவலப்படுத்தும் விதமாக அப்படிச் சொல்லியிருப்பார்கள்.
ஆமை பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அது நம்மை ஏறிட்டுப் பார்க்கையில் சற்றே வித்தியாசமாக இருக்கும். அதன் கனத்த முதுகும், ஓட்டுக்கு வெளியே தெரியும் அதன் முகமும், நான்கு பாதங்களும் மனிதனுக்கு அருவருப்பு தந்திருக்கும்.

அதனால் அதைக்கிட்டே சேர்க்கப் பிரியப்படாமல், ஆமையைக் கேவலப்படுத்தும் விதமாக அப்படிச் சொல்லியிருப்பார்கள்.

வெளிநாட்டில், பல வளமான வீடுகளில் ஆமைகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள்.

நம் வீட்டில் மீது ஆந்தை உட்கார்ந்தால், அது கெட்ட சகுனம் என்கிறோம். ஐரோப்பாவில் ஆந்தை வீட்டின் மீது உட்கார்ந்தால், அதை மிக அதிர்ஷ்டம் என்று கருதுகிறார்கள்.

ஓர் ஆமை அவ்வளவு சுலபத்தில் வீட்டுக்குள் நுழைந்துவிட முடியுமா? அதன் வேகத்துக்கு அது வாசலைக் கடந்து வீட்டுக்குள் வரவே பல மாதங்கள் ஆகுமே! ஒருவேளை இவ்வளவு மெதுவான ஆமை புகுவதைக் கூட கவனிக்க முடியாத அளவு அலட்சியமாகப் பராமரிக்கப்படும் சோம்பேறித்தனமான வீடு எப்படி உருப்படும் என்று கேள்வி வந்திருக்குமோ?
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert