சிலர் மழை வருவதுபோன்ற சமிக்ஞைகள் தென்பட்ட உடனே குடையை தேட ஆரம்பித்துவிடுவார்கள்! அப்படிப்பட்டவர்களுக்கு இயற்கையோடு வாழ்வதென்பது புரியாத விஷயம்தான்! இங்கே, ஆடுமேய்க்கும் சிறுவனும் உயர்பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியும் எவ்விதத்தில் முரண்படுகிறார்கள் என்பதை கதை உணர்த்துகிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ரொம்பப் பெரிய நிறுவனத்துல, ரொம்பப்பெரிய பதவியில இருந்த ஒரு அதிகாரி மலைப் பிரதேசத்திற்குப் போனாரு. அவரோட வாழ்க்கைல இரண்டு நாள் லீவுங்கிறது பெரிய விஷயம்; அதனால் அதை முழுமையா அனுபவிக்கலாம்னு நினைச்சுட்டு ரூம விட்டு வெளிய வந்தாரு. அங்க ஆடு மேச்சுட்டு இருந்த பையன் கிட்ட... “இன்னிக்கு வானிலை எப்படி இருக்கும்னு உன்னால சொல்ல முடியுமா?”னு கேட்டாரு.

அதற்கு அந்தப் பையன், “ஓ, எனக்குப் பிடிச்சமாதிரியே இருக்கப் போவுது பாருங்க!”ன்னான்.

“சரி, அப்படின்னா உனக்கு எந்த மாதிரி வானிலை பிடிக்கும்?”

“மலைல இத்தனை வருஷம் வாழ்ந்த என்னோட அனுபவத்தை வச்சுப் பார்க்கும்போது, மலையோட சீதோஷ்ண நிலையப் பத்திச் சொல்றது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். ஆனா, சீதோஷ்ணம் எப்படி இருக்கோ, அது அப்படியே எனக்குப் பிடிக்கும்” அப்படின்னு சொன்னான் பையன்.

யாரு வாழ்க்கைய புத்திசாலியா வாழ்றாங்கன்னு புரியுதா?