ஆதியோகி ஆலயம்

Sadhguru at Aadhi Yogi Aalayam site
[twocol_one] click on photo to zoom
Sadhguru at Aadhi Yogi Aalayam site
Gathering at morning event
Sun - Moon
Planned Aadhi Yogi Aalayam
click on photo to zoom
[/twocol_one] [twocol_one_last]

இரண்டு நாள் ஹைதராபாத் பயணம் முடித்து, 20ம் தேதி யோகா மையம் வந்தபோது, ஏற்கனவே இரவு நேரமாக இருந்தது. எனினும் நேராக ஆதியோகி ஆலயம் கட்டுமான இடத்திற்குத்தான் சென்றேன். அடுத்த நாள், 82,000 சதுர அடி பரப்புள்ள, தூண்களற்ற ஹாலுக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஏற்பாடாகியிருந்தது. இந்த அரங்கின் கட்டுமானம் பற்றி அறிந்தவர்கள், இந்த அரங்கு கட்டிமுடிக்கும்போது, இத்தகைய அரங்குகளில், ஆசியாவிலேயே, இதுதான் மிகப் பெரியதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அடிக்கல் நாட்டு விழாவிற்காக அங்கு தயார் செய்யப்பட்டிருந்த, சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த கல்தூண் பார்த்தேன். மனித விழிப்பணர்வை உயர்த்துவதற்காக கட்டப்பட உள்ள மிகப்பெரிய அரங்கின் கட்டுமானத்திற்கு பொருத்தமாக இல்லாதது போல அந்த கல்தூண் சிறியதாக இருந்தது. எனவே 11 டன் எடையுள்ள, 4 பக்கங்கள் கொண்ட வேறு ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்து அந்தக் கல்லில் சூரியன் சந்திரன் உருவங்கள் பொறித்து அடுத்தநாள் விழா நடக்கவுள்ள இடத்திற்கு நகர்த்த சொன்னேன்.

ஆனால் அப்போதே மணி இரவு 10க்கும் மேலாகியிருந்தது. இந்த நேரத்திற்கு மேல் அந்த உருவங்களை பொறித்து, பிறகு அதை அடுத்த நாள் விழா நடக்கும் இடத்திற்கு நகர்த்துவது மிகவும் சுலபமான வேலை அல்ல. ஆனால் பிரம்மச்சாரிகள் நிறைந்த எங்கள் கட்டுமானக்குழு நான் எதிர்பார்த்ததை சரியாக செய்துவிட்டார்கள். நாங்கள் இங்கு எப்படி செயல்செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களுடைய வேலையில் பகல், இரவு வேறுபாடு இல்லை. வாரத்தின் ஏழு நாட்களும் வேலைதான். மேலும் நினைத்துப் பார்க்கவே முடியாத கெடு தேதிகள். ஆனால் மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் அப்பணிகளை இவர்கள் நிறைவேற்றுவது ஏறக்குறைய அசாத்திய மனித செயலாகத் தெரிகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் வாழ்வது யாருக்குமே மனம் நெகிழ்வதாகவும் ஊக்கம் தருவதாகவும் இருக்கிறது.

அடுத்தநாள் காலை அடிக்கல் நாட்டு விழா, வெட்ட வெளியில் நடந்ததால் சுருக்கமாக நடந்து முடிந்தது. மேலும் சூரியன், ஏதோ தன் உருவத்தை நிறுவும் இந்த விழாவில் தான் கண்டிப்பாக தலை காட்டியாக வேண்டும் என்பது போல, தன்னுடைய உக்கிரமமான கிரணங்களுடன் தலைகாட்டினான்.

மனித விழிப்புணர்வை உயர்த்தும் முயற்சியில், ஆதியோகி ஆலயம் என்பது இந்த வகையில் முதலாவதாகும். மற்றும் மனித விழிப்புணர்வை நெறிப்படுத்தும் பணியில் முக்கியமான பங்கை ஆற்றிய ஒரு உயிரை அங்கீகரிப்பதுமாகும். உலகின் பல இடங்களில் இது போன்று அமைக்க நாம் திட்டமிட்டிருந்தாலும், அறிவும் அருளும் பொழியும் இந்த புனிதமான மலைச்சாரலில்தான் முதல் அமைப்பு உருவாகிறது. இந்த அடித்தளம் இருப்பதால் ஆதியோகி ஆலயம் உள்வளர்ச்சிக்கான சக்தித்தலமாக நிச்சயம் உருவாகப் போகிறது.

Click here to watch the Aadhi Yogi video.

அன்பும் அருளும்,

Sadhguru
[/twocol_one_last]இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert