கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 6

குதிரையுடன் கீழே விழுந்து தப்பித்தது; கோவில் காளையை அடக்கியது; திருடர்களை சவால் விட்டுப் பிடித்தது; ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தது என தனது சாகசப் பயணத்தை தொடர்ந்த ராகவேந்திரா, ஆபத்தான கிராமமாகக் கருதப்பட்ட மல்லாடிஹள்ளிக்குள் நுழைந்தாரா?! விடை அறிய தொடர்ந்து படியுங்கள்!

மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராகவேந்திரர் தொங்க, ராகவேந்திரர் கால்களில் குதிரை தொங்க, இருவரும் அந்தரத்தில் தொங்கினர். இருவரது எடையையும் சேர்த்துத் தாங்க முடியாமல் அந்தக் கிளை முறிந்து விழுந்தது. குதிரை சமாளித்து எழுந்துவிட்டது. ஆனால், ராகவேந்திரருக்கு நல்ல வலி. அது காட்டுப் பாதை. கண்ணுக்கெட்டிய வரையில் மனிதர்கள் கிடையாது. சமாளித்து எழுந்தவர் எப்படியோ கஷ்டப்பட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அவருடைய முக்கிய வேலை சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே ரகசியச் செய்திப் பரிமாற்றத்துக்கு உதவுவதுதான்.

இன்னொரு முறை கோவில் காளை, மிகவும் பலம் வாய்ந்த காளை ஒன்று, கொம்பில் பண முடிப்பு கட்டப்பட்டு வெளியே விடப்பட்டது. அதை அடக்குபவர்கள் அந்தப் பண முடிச்சை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தனர். யாராலும் அதை அடக்க முடியவில்லை. ஆனாலும், ராகவேந்திரர் அந்தக் காளையை கண்ணிமைக்கும் நேரத்தில் அடக்கிப் பண முடிப்பைப் பெற்றார்.

வீடுகளில் இரவில் புகுந்து திருடும் திருடர்களை பல முறை சவால்விட்டுப் பிடித்திருக்கிறார். அதேபோல் பேய், பிசாசு இருக்கிறது என்று கைவிடப்பட்ட வீடுகள், அல்லது சுடுகாடு இவற்றில் இரவுகள் தங்கி மக்களின் பயத்தைப் போக்கியிருக்கிறார். மனிதனைவிட பெரிய பிசாசு எதுவும் கிடையாது என்று எப்போதும் சொல்வார். எதற்குமே அஞ்சாதவராக இருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
1943ம் ஆண்டில், மல்லாடிஹள்ளி என்னும் கிராமத்துக்குச் சென்று பயிற்சியளிக்கத் தீர்மானித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது மறைமுகமாக இருந்து செயல்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உணவும் தங்குமிடமும் கொடுத்தார். அவருடைய முக்கிய வேலை சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே ரகசியச் செய்திப் பரிமாற்றத்துக்கு உதவுவதுதான். ஏற்கெனவே அவர் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருந்ததால், இந்தச் செயலைத் திறம்படச் செய்தார். ஒரு முறை ஒரு ரகசியச் செய்தியை தூரத்தில் இருந்த இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே, ரயிலில் பயணம் செய்தார். ரயில் சென்றுகொண்டு இருந்தபோது இரு காவலர்கள் அனைத்துப் பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர்.

இவரிடமோ ரகசியச் செய்திகள் இருந்தன. எனவே, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ரயில் பெட்டியில் டாய்லெட் அருகே சென்று காவலர்களின் பார்வையில் இருந்து மறைந்த பிறகு, ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்து கீழே குதித்தார். ஒரு புதரின் மீது விழுந்தார். சில சிராய்ப்புகளோடு தப்பிவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து செய்தி கொடுக்க வேண்டிய இடத்துக்கு நடந்தே சென்று கொடுத்து வந்தார்.

ஒவ்வொரு ஊரிலும் தங்கும்போது, அங்கு யோகா மற்றும் உடற்கலையில் பயிற்சியளிப்பது மட்டும் ராகவேந்திரரின் நோக்கமாக இருக்கவில்லை. சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வது, கிணறுகள் சுத்தம் செய்வது, ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்துவது, மருத்துவம் பார்ப்பது, கலாச்சாரத்தைப் பரப்புவது, கதர் பிரச்சாரம் செய்வது, போதைப் பொருட்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வது, புகை மற்றும் சூதாட்டத்துக்கு எதிராகப் போராடுவது போன்ற பணிகளையும் செய்தார். எனவே, செல்லும் இடமெல்லாம் ராகவேந்திரர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்.

மல்லாடிஹள்ளி, ஆதிவாசிகள் நிறைந்த கிராமம். அவர்கள் அறியாமையிலும் சுகாதாரமற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர்.

இப்படி ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருக்கும்போதுதான், 1943ம் ஆண்டில், மல்லாடிஹள்ளி என்னும் கிராமத்துக்குச் சென்று பயிற்சியளிக்கத் தீர்மானித்தார். ராகவேந்திரர் மல்லாடிஹள்ளி கிராமத்துக்குச் செல்லப்போவதை அறிந்த மற்றவர்கள், ராகவேந்திரர் மேல் அக்கறை கொண்டவர்கள், அவர் அந்தக் கிராமத்துக்குச் சென்றால் விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்தனர்.

ஆனாலும் அவர்களின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு ராகவேந்திரர் சித்திரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள மல்லாடிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தார்!

மல்லாடிஹள்ளி கிராமத்தின் அருகிலேயே வசித்து வந்த சங்கரலிங்க பகவான் உட்பட, ராகவேந்திரர் மேல் அக்கறைகொண்ட அனைவருமே, ‘மல்லாடிஹள்ளி கிராமத்து மக்கள் முரட்டுத்தனமானவர்கள், நாகரிகமற்றவர்கள், மனப்பக்குவம் அற்றவர்கள்’ என்று சொல்லி அவரைத் தடுக்கப் பார்த்தனர். ‘செத்த பிணம்தான் தவறு செய்யாது. மற்றவர்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே, நான் அங்கு போகத்தான் போகிறேன்’ என்று மல்லாடிஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தார். அவர் அந்தக் கிராமத்துக்குச் சென்றது ஏழு நாட்கள் மட்டும் தங்கி இருந்து யோகா மற்றும் அடிப்படைச் சுகாதாரம் சொல்லிக்கொடுக்கத்தான். ஆனால், அதற்கே இவ்வளவு அறிவுரைகள்!

மல்லாடிஹள்ளி, ஆதிவாசிகள் நிறைந்த கிராமம். அவர்கள் அறியாமையிலும் சுகாதாரமற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர். சரியாகக் குளிப்பது கிடையாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது கிடையாது. இப்படி இருக்கும்போது அவர்கள் யோகா கற்பார்களா? ஆனால், இதுபோன்ற சவால்கள்தானே ராகவேந்திரருக்குப் பிடிக்கும்.

அடுத்த வாரம்...

மல்லாடிஹள்ளி கிராம மக்களுக்கு ராகவேந்திரா செய்த அற்புதங்கள் என்ன என்பதை விளக்குவதாக அமைகிறது அடுத்த வாரப் பகுதி.

nicksarebi@flickr

கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்