ஈஷா யோகா மையத்தில் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான 'யக்ஷா' திருவிழாவின் இன்றைய ஐந்தாம் நாள் கொண்டாட்டம் எப்படி அமைந்தது... இங்கே ஒரு கண்ணோட்டம்!

திரு.உஸ்தாத் சயிதுதின் தாகர் அவர்கள் மனதை மயக்கும் பல ராகங்களில் 'த்ருபாத்' வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை வழங்கினார். கேட்டோர் இதயத்தை இசையால் நிறைத்த அந்த அருமையான இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

புகழ்பெற்ற த்ருபாத் வாய்ப்பாட்டு கலைஞரான திரு. உஸ்தாத் சயிதுதின் அவர்கள் பாரம்பரிய இந்துஸ்தானி இசைக் குடும்பமான தாகர் எனும் பெருமை மிக்க பரம்பரையிலிருந்து வந்தவராவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசை வடிவத்தை தாங்கி நிற்கும் தூண்களாக இருக்கும் தாகர் குடும்பத்தினர் 'த்ருபாத்' எனும் அற்புத பாரம்பரியத்தை இன்றுவரை உயிர்ப்போடு இருக்கச் செய்துவருகின்றனர்.

நாளைய 6ஆம் நாள் நிகழ்ச்சியில் வயலின் இசைக்கலைஞர்கள் திரு.கணேஷ் மற்றும் திரு.குமரேஷ் ஆகிய இருவரும் இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியை http://mahashivarathri.org/yaksha-2015-live-webstream/ என்ற இணைய முகவரியில் இலவசமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.