ஈஷா தமிழ் வலைதளத்தின் வாசகர்களான உங்களுக்கு, இதோ 2014ம் ஆண்டின் சில பதிவுகள் இங்கே...நீங்கள் தவற விட்டிருந்தால் அல்லது மீண்டும் வாசிக்கும் விருப்பம் இருந்தால் இதை க்ளிக் செய்யுங்கள்... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை...

2050ல் நடக்கவிருக்கும் விபரீதம்?!

யோகாவிற்கு சுற்றுச் சூழல் ரம்யமாக இருப்பது அவசியமா என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் கேட்க, சிறுவயது முதலே தன் கண்களில் பதிந்திருந்த வெள்ளியங்கிரி மலையைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் வெகுவாக விளக்குகிறார் சத்குரு. தொடர்ந்து, மக்கள் தொகைப் பெருக்கத்தால் 2050ல் நடக்கவிருக்கும் விபரீதம் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த வீடியோ பதிவு அனைவரும் பார்த்து பயன்படக்கூடியது.

மலச்சிக்கல் குணமாக சில ஆலோசனைகள்

குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல் ஆகும். இந்த மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை நமக்கு தெளிவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விதிப்படிதான் எல்லாம் நடக்குதா?

"ஐயோ, என் தலையெழுத்து ஏன் தான் இப்படியிருக்கோ" என்று நொந்து கொள்பவர்கள் ஏராளம். அதிலும், "எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்குதோ" என்று அலுத்து கொள்பவர்கள் தனி ரகம். இப்படி அலுத்துக் கொண்டு புலம்புவதால் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நொந்து கொள்ளும் ஒருவருக்கு சத்குரு வழங்கிய சில நடைமுறை குறிப்புகள் இங்கே உங்களுக்காக... 1998 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிறப்பு வீடியோ இது...

ஈஷாவில் ஏன் பாம்பு மோதிரம்?

மக்களின் ஆன்மீக நலனுக்காக ஈஷாவில் வழங்கப்படும் கருவிகளில், பாம்பு மோதிரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன் என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை.

முன் ஜென்மம் பற்றி பேசலாமா?

"இது உன் பூர்வ ஜென்ம கர்மா!; எல்லாம் உன் தலைவிதி...!" நமக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது இப்படி யாரேனும் கூறினால், அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் 'கர்மா-தலைவிதி' இதெல்லாம் உண்மையா? ஆன்மீகத்தில் பூர்வ ஜென்மம் பற்றி பேச வேண்டுமா? திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு.பார்த்திபன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் சத்குரு, நமது அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகிறார்.

ருத்ராட்சம் அணிந்தால்...

ருத்ராட்சம் அணிந்தாலே, "சாமியாராக போய்விடுவோம்" என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை...

நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்?

"உன்னோட பேச்சே வர வர சரியில்ல, முதல்ல பேசுறதுக்கு கத்துக்கோ!" சிலர் இப்படி அதட்டலாகவும் சிலர் அட்வைஸாகவும் நம்மிடம் சொல்வதுண்டு. உண்மையில், பேசக் கற்றுக்கொள்வது அவசியமா? நம்மிடம் இருந்து வரும் பேச்சின் தன்மைக்கு எது காரணம்? சத்குரு இந்த வீடியோவில், பேச்சைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும் பேசுகிறார்! நமது பேச்சு எப்படியிருக்க வேண்டுமென்பது வீடியோவின் மூலம் தெளிவாகிறது.

உடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன?

யோகா பயில்கிறவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அறவே கூடாது என்று வலியுறுத்தப்படுகிறதே ஏன்? உடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன?

மன உறுதியினால் ஜோசியத்தை பொய்யாக்க முடியுமா?

மனிதனாகப் பிறந்துள்ள நாம், யாரோ ஒருவர் கணித்துக் கூறியபடிதான் இருக்கப் போகிறோம் என்றால், இந்த மனிதப் பிறப்பிற்கு அப்புறம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது?! நமது நோக்கத்திற்கு எதிர்மறையாக ஜோசியர் எதையோ சொல்லிவிட்டால், உடனே நொறுங்கிப் போய்விடுபவர்கள் இங்கே பலர் உண்டு. அப்படிப்பட்டவர்கள், திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் அவர்கள் சத்குருவிடம் உரையாடும் இந்த வீடியோ பதிவை பார்த்தால், நமக்கு எதிரான ஜோசியத்தை பொய்யாக்கும் சூட்சுமத்தை அறியலாம்!

தீராத நோய்களை வெல்லும் வழி!

என்னதான் நவீன விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இன்னும் குணப்படுத்த முடியாத நோய்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட நோய்கள் வருவதற்கு நமது கர்மாதான் காரணமா? ஒரு டாக்டரின் இந்தக் கேள்விக்கு சத்குருவின் பதில் என்ன என்பதை வீடியோவில் காணலாம்!